புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014





நாற்பதுக்கு நாற்பது எனச் சொல்லி 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகும், அ.தி.மு.கவில் மந்திரிகள் மாற்றம், மா.செக்கள் மாற்றம், பிற நிர்வாகிகள் மாற்றம் ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஜெ.வின் நடவடிக்கை களால் தங்களுக்குப் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிலரும், இருக்கின்ற பதவி போய்விடக்கூடாதே என்ற பதை பதைப்பில் பலரும் உள்ளனர்.

மாஜி மனுவுக்கு மரியாதை

வேலூர் புறநகர் கிழக்கு மா.செ.வாக நியமிக்கப்பட்டிருக்கிறார் வழக்கறிஞர் பார்த்திபன். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச்செய லாளராக இருந்த இவருக்கு வயது 36. இந்த இளம்வயதில் மா.செ. பதவியா என மாவட்ட சீனியர்கள் அதிர்ச்சியடைந்திருக்க, மகனுக்கு மா.செ. பதவி கிடைத்ததில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் பார்த்திபனின் அப்பாவும் முன்னாள் எம்.பி.யுமான கோபால். தலைமைச் செயலகத்திலிருந்து ஜெ. கிளம்பும் போது, கையில் ஒரு மனுவுடன் அவரைப் பார்த் துக் கும்பிட்டார் கோபால். மாஜி எம்.பி.யின் தொடர் விசுவாசத்தால் அவர் மீது ஜெ.வுக்கு நல்லெண்ணம் உண்டு. மனுவை வாங்கிக் கொண்டார். 

அதில் தன் மகனுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு அளிக்குமாறு கோரியிருந்தார் கோபால். மா.செ. பதவி அளிக்கப்படவே, பதவிபெற்ற மகனைவிட, அதற்காக மனு கொடுத்த அப்பாவுக்கு அதிகபட்ச மகிழ்ச்சி.

7 ஆண்டுகளுக்குப் பிறகு..

தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்களால் நம்பவே முடியவில்லை. 2001-2006 ஜெ. ஆட்சிக்காலத் தின் இடையிலேயே அவரது மந்திரி பதவி பறிக்கப்பட்டது. 2007ல் மா.செ. பதவியையும் பறித்த ஜெ., "நீங்க நிறைய பலன்களை அனுபவிச்சிட்டீங்க. கட்சி உங்களுக்கு அதிகமாகவே செஞ்சிடிச்சி. இனி நீங்கதான் கட்சிக்கு நிறைய செய்யணும். பதவிகளை இனிமேல் எதிர்பார்க்காதீங்க' என்று தளவாயிடம் சொல்லிவிட்டார். அதன்பிறகு தேய்பிறையாகவே இருந்தது தளவாய் சுந்தரத்தின் அரசியல் நிலை. இப்போது, அவரைத்தான் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமித்திருக்கிறார் ஜெ. 7 ஆண்டுகளில் 8 மா.செக்களை மாற்றியும் குமரி மாவட்டத்தில் தலைமை நினைத்த வளர்ச்சி கிடைக்கவில்லை. தளவாய்க்கு கடைசி சான்ஸ் ஒண்ணு கொடுத்துப் பார்க்கலாமே என வழக்கமான பவ்யத்துடன் ஓ.பி.எஸ் சிபாரிசு செய்ய, ஜெ.வும் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார். 


கொங்கு கணக்கு

துணை சபாநாயகர் பதவி என்பது பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆட்சிப் பொறுப்பு. திருப்பூர் புறநகர் மா.செ என்பது கட்சிக்கான புதிய பொறுப்பு. கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களில் கவுண்டர் சமுதாயத்தவர்தான் அதிகளவில் அமைச்சர்களாகவும் கட்சிப்பொறுப்புகளிலும் உள்ளனர். அடுத்ததாக, நாயுடு சமுதாயத்தவருக்கான கோட்டாவில் சைரன் காரில் சுற்றுகிறார் அரசு கேபிள் டி.வியின் உடு மலை ராதாகிருஷ்ணன். அருந்ததியர் சமுதாயத் தைச் சேர்ந்த தனபால் சபாநாயகராக இருக் கிறார். கொங்கு மண்டலத் தில் உள்ள மற்ற சமுதாயத் தினருக்கும் பிரதிநிதித்துவம் வேண் டும் என்பதால்தான் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு மா.செ. பதவியாம்.

அதிர்ச்சியில் சீனியர்கள்

வெற்றிக்குப்பிறகும் கே.பி. முனுசாமி அமைச்சர் பொறுப்பு உள்பட அனைத்திலிருந்தும் கழற்றி விடப்பட்டார். மேலும் பல நிர்வாகி கள் நடவடிக்கைகளுக்குள்ளாயினர். கட்சிக்காரர் களிடமிருந்து குவியும் புகார்களைத்தவிர, வெற்றி பெற்ற எம்.பிக்கள் சிலரும் தங்கள் தொகுதியில் எங்கெங்கே யார்யார் உள்குத்து வேலை செய்தார்கள் என்பது பற்றி புகார்களைக் கொடுத்து வருகிறார்கள். 

இதனடிப்படையில் விசாரிக்கப்பட்டிருக்கிறார் கட்சியின் சீனியரும் ஓரங்கட்டி வைக்கப்பட்டி ருப்பவருமான செங்கோட்டையன். கடந்த எம்.பி. தேர்தலின்போது அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகுதி சிதம்பரம். அங்கே அ.தி.மு.க நல்ல லீடிங்கில் வெற்றி பெற்றது. ஆனால், செங்கோட்டையன் மீது புகார் கொடுத்திருப்பவர் திருப்பூர் தொகுதி பெண் எம்.பி. சத்யபாமா.

செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபி இந்த எம்.பி. தொகுதிக்குள்தான் வருகிறது. அங்கே செங்க்ஸின் ஆட்கள் தனக்கு எதிரான வேலைகளைப் பார்த்ததாக சத்யபாமா கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவரும்  பதில்களைத் தயார் செய்துகொண்டுதான் போனார். சீனியரான அவரை விசாரித்தவர்களோ அமைச்சர் கோகுல இந்திரா, திருச்சி எம்.பி. குமார், மேட்டுப் பாளையம் செல்வராஜ் இவர்களுடன் மத்திய சென்னை எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பம் ஆகியோர் அடங்கிய டீம். இவர்கள் அனைவருமே செங் கோட்டையனுக்கு சப்-ஜூனியர்கள். மிகவும் தர்மசங்கடப்பட்ட செங்கோட்டையன் ஜெ.விடம் தான் அளிக்க வேண்டிய பதில்கள் அடங்கிய கடி தத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும் இதே போன்ற விசாரணைதான்.  மேலும் பல சீனியர்களும் இத்தகைய விசாரணைக்குள் ளாகலாம் என்பதால் அமைச்சர்கள் உள்பட பலரும் பீதியடைந்துள்ளனர். கட்சியின் சீனியர்களை நேரில் அழைத்து ஜூனியர்கள் விசாரிப்பதை தலைமைக்கழகத்தில் இருப் பவர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. 

டோஸ் வாங்கிய மந்திரி

மாண்புமிகுக் களில் பவர்ஃபுல்லாக இருப்பவர் வைத்தி லிங்கம் என்பதை சக அமைச்சர்களே ஒப்புக்கொள் கிறார்கள். ஜெ.விடம் பேசக்கூடிய வாய்ப்பும் இவருக்குத்தான் அதிகம். அப்படிப்பட்டவர் சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை "ஓடுகாலி' என்று சொல்லி சர்ச்சையை உண்டாக்கியதால், ஜெ.விடம் வாங்கிக் கட்டியிருக்கிறார். "11 மாடி இடிந்து விழுந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் கிளப்பினால், அதுபற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருப்பதால் வேறு எதுவும் விவாதிக்க முடியாதுன்னு பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்திருக்கவேண்டியதுதானே? ஏன் தேவையில்லாத வார்த்தைகளையெல்லாம் பேசுனீங்க' என ஜெ. குரலை உயர்த்திக் கேட்க, அமைச்சர்களுக்கேயுரிய பாணியில் பம்மி நின்றிருக்கிறார் வைத்திலிங்கம்.

ad

ad