புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014


காசாவில் உச்சகட்டப் போர்: பாலஸ்தீனியர்கள் 435 பேர் பலி -60 ஆயிரம் பேர்
அகதிகள் முகாமில் தஞ்சம்
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப் பாட்டில் உள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே
இப்பகுதியில் அடிக்கடி மோதலும் திடீர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது.


இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதும் தொடர்கதையாகி விட்டது. 
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை ஹமாஸ் படையினர் கடத்திச் சென்றனர். அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.
இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 8–ந்தேதி தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, நிலைமை மோசமடைவதை தவிர்க்க இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. அத்துடன் ராக்கெட் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. 
இதனால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கும் உத்தர விட்டது. எனவே, காஸாவின் கடலோர பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக் குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது. 

ad

ad