பெண்கள் குழுக்களுக்கிடையில் மோதல்: 5 பேர் படுகாயம்
இரு பெண்கள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று புன்னாலைக் கட்டுவன் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதில் மகாலிங்கம் செல்வராணி (வயது 57) ,மகாலிங்கம் பகிந்தா (வயது 30), சசிதரன் ஆனந்தி (வயது 41), குமரேசன் ஜெனித்தா (வயது 30), மற்றும் சின்னராசா ஞானேஸ்வரி (வயது 60) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணொருவரைக் காதலித்து பெண்ணைத் தூக்கிச் சென்றமை தொடர்பில் இரு பெண்கள் குழுக்களுக்கிடையில் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இவ்வாறு கைகலப்பாக மாறியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்