புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014


சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் பல்லாயிரம் மக்கள் புடைசூழ சிறப்புற இடம்பெற்ற தேர்ப் பவனி!
சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர்ப் பவனி சிறப்புற இடம் பெற்றதுடன், தாயகத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் ஆலயத்தின் காட்சிகள் அமையப் பெற்றிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தமைக்கு பிரதான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பிகையின் பக்தர்கள் பறவைக் காவடி, கற்பூரச் சட்டி, புரதட்டனம் போன்ற நேர்த்திகளை நிறைவேற்றியதுடன், பல்லாயிரம் பக்தர்கள் தாயக நினைவுகளுக்கு நிகரான நினைவுகளுடன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தாயகத்தின் கோயில் அமைப்பினை ஒத்ததாக அமைந்துள்ள கோயிலின் அமைப்புக்கள் வயலும் வயல் சார்ந்த இடமும் போன்ற சூழலை ஏற்படுத்தியது.
இயற்கை எழில் மிக்க மலையும் அதனைச் சூழ உள்ள ஆலயத் தோற்றமும் பலரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. கடல் கடந்து பல மையில்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும் மண்ணின் வாசனை மாறாத வண்ணமாய் ஆலயத்தின் தன்மை அமைந்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் பல மாநில மக்களும் கலந்து திருவிழா காலங்கள் மற்றும் தேர்ப் பவனிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இத் தேர்ப் பவனி நாட்களில் சாலை தொலைக்காட்சி மற்றும் லங்காசிறி தனது ஆதரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ad

ad