புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014

இனி உதயமாகும் குவா குவா குட்டிகளுக்கு “அம்மா பேபி கிட்”

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க தேவையான 16 பொருட்கள் அடங்கிய 'அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது,
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய "‘அம்மா' குழந்தை நல பரிசு பெட்டகம்" வழங்கப்படும் .
இந்த பெட்டகம், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தை உடை, குழந்தை படுக்கை, கொசு பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், 100 மில்லி லிற்றர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிற்றர் ஷாம்பூ, சோப்புப் பெட்டி, சோப்பு, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை உள்ளது.
மேலும் சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிற்றர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா' சுண்டிலேகியம் உள்ளிட்ட 16 பொருட்கள் உள்ளடங்கும் என அவர் கூறியுள்ளார்.
மொத்தம் ரூ. 67 கோடி செலவாகும் இத்திட்டதினால் சுமார் 6.7 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad