புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014

டி ஆர் பாலுவுக்கு உடல்நிலை மோசம் -சத்திரசிகிச்சை 


 லாஸ்ட் புல்லட்!

சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம் நிச்சயம் என மாண்புமிகுக்கள் பலரும் திகிலடித்துள்ள நிலையில் வியாழனன்று இரவு செங்கோட்டையன், இசக்கி சுப்பையா, ஜே.சி.டி. பிரபாகரன் மூவரும் ஜெ.வை சந்தித்து திரும்பினர். இது இவர்களின் மாவட்டத்தில் உள்ள மாண்புமிகுக்களின் டென்ஷனை அதிகப்படுத்தியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மேயர்கள் எம்.பி.யாகிவிட்டதாலும் கோவை மேயரை ராஜினாமா செய்யச் சொன்னதாலும் அவை காலியாக உள்ளன. மேலும், 115 உள்ளாட்சி இடங்களும் காலி. இதில் கோவை தவிர்த்து மற்றவற்றுக்கு செப்டம் பர் 18-ல் தேர்தல் என புதனன்று அறிவித் தது மாநில தேர்தல் ஆணையம். மறுநாள், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக் கப்பட்டது. 6 மாதத்திற்குள் இடத்தை நிரப்ப வேண்டும் என்பதால் தேதி அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், மேயர் பதவி காலியான 90 நாட்கள் கழித்துதான் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். கோவை மேயர் பதவிக்கு இன்னும் 90 நாள் அவகாசம் முடியவில்லை என்பதால் ஒன்றாக தேர்தல் நடத்தும் திட்டத்துடன் தான் மற்ற இடங்களுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சுறுசுறுப்பான அரசியல் பிரமுக ரான டி.ஆர்.பாலு, தேர்தல் தோல்விக்குப் பிறகு உடல்நலன் பாதிக்கப்பட, அவருக்கு பைபாஸ் செய்ய வேண் டும் என டாக்டர்கள் தெரி வித்தனர். 9-ந்தேதியன்று மும்பையில் அறுவை சிகிச்சை நடக்கிறது. மு.க.ஸ்டாலின் மும்பை சென்று பாலுவை நலன் விசாரிக்க உள்ளார்.

ad

ad