புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014

கருப்பு பண பட்டியல் கிடைத்தது: எவ்வளவு பேர் தெரியுமா?

கருப்பு பணம் தொடர்பாக, கடந்த நிதியாண்டில் வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்கள் 24 ஆயிரம் பேரின் தகவல்களை பெற்றுள்ளது இந்தியா.
பதுக்கிய கோடிக்கணக்கான கருப்பு பணத்தை கண்டுபிடிக்க வருமான வரித்துறையின் நேரடி வரிவிதிப்பு வாரியம்(சிபிடிடி), சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த திடமான முதல் தகவல்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(ஓஇசிடி), 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் மூலம் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 24 ஆயிரத்து 85 பேரின் விவரங்களை வருமான வரித்துறையின் சிபிடிடி பிரிவு பெற்று, சிறப்பு விசாரணை குழுவிடம் அளித்துள்ளது.
நியூசிலாந்து 10,372 பேரின் தகவல்களை அளித்தது. இதேபோல் ஸ்பெயின்(4,169), இங்கிலாந்து(3,164), ஸ்வீடன் (2,404), டென்மார்க் (2,145), பின்லாந்து(685), போர்த்துக்கல்(625), ஜப்பான்(440), சால்வேனியா(44) தகவல்களை அளித்தன.
அதே போல் அவுஸ்திரேலியா, மெக்சிகோ, இத்தாலி, டிரினிடாட் மற்றும் டொ பாகோ ஆகிய நாடுகளும் இந்தியாவிடம் சில தகவல்களை அளித்துள்ளன

ad

ad