புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014

வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி 11 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்

ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த 11 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 
Moudon எனும் நகரத்தில் இருந்து 59 Km தூரத்தை தாண்டி Rolle எனும் நகரத்தை வந்தடைந்தது .
தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி  ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயசெயற்பாட்டாளர்களுக்கு செல்லும் வழிகளில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது ஆதரவையும் , உதவிகளையும்  கொடுத்து வருகின்றனர் .


எதிர்வரும் திங்கள் கிழமை ஐநா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்  நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் ஈருருளிப்பயணம் நிறைவடைய இருக்கின்றது .

தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழமே எனும் உறுதியோடு ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயசெயற்பாட்டாளர்கள் மிகுந்த வலிமையோடு சர்வதேச அரசியல் முச்சந்தி நோக்கி பயணிக்கின்றனர் அத்தோடு இப் பேரணியில் அனைத்து ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி உரிமையோடு வேண்டி நிற்கின்றனர் . 
ஈருருளிப்பயணம் கடந்த நாட்களில் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து செல்லும் போது பல  உள்ளூர் பத்திரிகைகளில் இவ் விடையம் சார்ந்து பிரசுரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.





ad

ad