""ஹலோ தலைவரே.. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியிலே உள்ளாட்சி இடைத் தேர்தல்கூட இந்தப்பாடு படுதே?''
""1848 காலியிடங்களில் 1159 இடங்களைத் தேர்தல் நடத்தாமலே அ.தி.மு.க ஜெயிச் சிடுச்சாமே!''
""எதிரியே இல்லைன்னு சொன்ன ஜெ. எங்களைக் கண்டு பயப்படுறாருன்னு பா.ஜ.க.வோட மாநிலத் தலைவர் தமிழிசை ஆரம்பத்தில் குரலை உயர்த்தினாரு. ஆனா, வேட்பாளர்களை அ.தி.மு.க பர்சேஸ் செய்ய ஆரம்பிச்சதும் மிரண்டு போயிட்டாரு. இந்தளவுக்கு இருக்கும்னு எதிர்பார்க்கலை யாம். இதையெல்லாம் கேள்விப்பட்ட விஜயகாந்த், செப்டம்பர் 9-ந் தேதியன்னைக்கு காலை 9 மணிபோல தன்னோட கட்சி நிர்வாகி களை சந்திச்சி பேசுனப்ப, அராஜகம்-. மிரட்டல், கடத்தல்னு தமிழிசை யாரைப் பார்த்து சொல்றாங்க? இதையெல்லாம் செய்றது ஜெயலலிதாவும் அவரோட கட்சிக்காரங்களும்தான்னு சொல்றதுக்குத் தமிழிசைக் குத் திராணி இல்லையே. இதெல்லாம் நடக்கும்னுதான் ஆரம்பத்திலேயே சொல்லி நாம ஒதுங்கிக்கிட்டோம். கலைஞரும் இதைத்தான் சொன்னாரு. பா.ஜ.க. கேட்கலையேன்னு வருத்தமா சொன்னாராம்.''
""இவ்வளவு தெரிஞ்சிருந்தும் விஜயகாந்த் ஏன் பா.ஜ.க.வை ஆதரிச்சாராம்?''
""ராஜ்நாத்சிங் போனில் பேசியதாலதான் ஆதரிச்சேன்னு நிர்வாகிகள்கிட்டே சொன்ன விஜயகாந்த், பா.ஜ.க வேட்பாளர் வெள்ளையம்மா விலைபோயிட்டாரு.. விலைபோயிட்டாருன்னு தமிழிசை சொல்றாங்க. ஆனா அவங்க கட்சியோட மத்திய அமைச்சர் இப்ப எதுக்கு சென்னைக்கு வந்தாரு, எதுக்கு ஜெ.வை சந்திச்சாரு. டெல்லியிலிருந்து வர்ற அவங்க கட்சிக்காரங்களெல்லாம் நேரா போயஸ் கார்டனுக்குப் போறாங்க அல்லது செக ரட்டரியேட் போறாங்க. திரும்பி ஏர்போர்ட்டுக்குப் போகும்போதுதான் லோக்கல் பா.ஜ.க ஆளுங்களுக்கு கையசைச்சி டாட்டா காட்டுறாங்க. எதுக்கு இந்த டபுள்கேம்? எனக்கெல்லாம் ஒண்ணும் தெரியாதுன்னு நினைச் சிட்டாங்களா? இந்த விஜயகாந்த் ஏமாளின்னு நினைக்கிறாங்களா? இந்த லட்சணத்துல அ.தி. மு.க.வுக்கு மாற்று பா.ஜ.க.தான்னு தமிழிசையும் ஹெச்.ராஜாவும் பேட்டி கொடுக்கிறப்ப எனக்கு சிரிப்பு போலீஸ் ஞாபகம்தான் வருதுன்னும் சொல்லியிருக்காரு.''
""ஜனநாயகத்தைக் காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் பாகுபாடு பார்க்காமல் ஒண்ணு சேரணும்னும் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையிலே சொல்லியிருக்காரே!''
""உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அரசின் அராஜகப் போக்கை கண்டிச்சி அறிக்கை ரெடிபண்ணுங்கன்னு நிர்வாகிகள் கிட்டே சொன்ன விஜயகாந்த், அந்த அறிக்கை ரெடியானதும் சில திருத்தங்களை செய்யச் சொல்லி, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க அழைக்கும் விதத்தில் இந்த அறிக்கையை விட்டிருக்காரு. இதை தி.மு.க சைடிலும் பாசிட்டிவ்வான சிக்னலாத்தான் பார்க்குறாங்க. தன்னோட அறிக்கையை ஆதரிக்கிற விதத்தில் பா.ஜ.க. நிறுத்தி யிருப்பவர்களை பொது வேட்பாளரா நினைச்சி தி.மு.க. ஆதரிக்கணும்னு எதிர்பார்ப்பு விஜய காந்த்கிட்டே இருக்குது. அ.தி.மு.க. தரப்பிலும் பா.ஜ.க.வை கடைசி நேரத்தில் தி.மு.க. ஆதரிச்சிடுமோங்கிற பதட்டம் தெரியுது. தி.மு.க. சைடில் கேட்டால், அப்படி எந்தத் திட்டமும் இதுவரை இல்லை. பா.ஜ.க. சைடிலிருந்தும் எங்ககிட்ட ஆதரவு எதுவும் கேட்கலையேன்னு சொல்றாங்க. விஜயகாந்த் தன் கட்சி நிர்வாகிகள்கிட்டே தி.மு.க பற்றி பேசியிருக்காராம் தலைவரே.. தி.மு.கவிலே உட்கட்சிப் பூசல் இருக்கிறது உண்மைதான். ஆனா அது சீக்கிரமா முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். அழகிரியை மறுபடியும் அவங்க கட்சியிலே சேர்த்துக்கப் போறாங்கன்னு தகவல் வருது. இனி என் வேலை ஜெ.வுக்கு எதிரா தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகளை இணைப் பதுதான்னு சொல்லியிருக்காரு.''
""எதிர்க்கட்சிகள் தரப்பில் சுரத்தே காணோமே.. ஆனா ஜெ. தொடர்ந்து வூடு கட்டிக் கிட்டுத்தானே இருக்காரு. பிரதமர் மோடியோடு சுப்ர மணியசாமி நல்ல நெருக்கம்னு தெரிஞ்சும் அவர் மேலே அவதூறு வழக்கு, ஆசிரியர் தினத்தில் மோடியோட லைவ் பேச்சை தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு பாடத்திட்டப் பள்ளிகளில் ஒளிபரப்ப அனுமதிக்காதது, பா.ஜ.க.வோடு நெருக்கமா இருந்த எம்.பி மைத்ரேயனோட பதவிகள் பறிப்பு, உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சான்ஸ் கொடுக்காதபடி வேட்புமனு சிக்கல்- வேட்பாளரைத் தூக்குவதுன்னு ஜெ.வோட அதிரடி தொடர்ந்துகிட்டே இருப்பதை அரசியல் வட்டாரம் ஆச்சரியத்தோடு பார்க்குது. செப்டம்பர் 20-ந் தேதி தீர்ப்புங்கிற நிலைமையில்கூட மத்திய அரசை இப்படி பகைச்சிக்க ஒரு தைரியம் வேணும்னு சொல்றாங்க.''
""தைரியம்னு சொன்னதும் எனக்கு குருதிப்புனல் படத்துல கமல் பேசுன வசனம்தான் ஞாபகத்துக்கு வருது. நீ மேலே சொல்லுப்பா.'
""ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கோர்ட்டிலேயே மயங்கி விழுந்துட்டாராமே?''
""ஆமாங்க தலைவரே.. தீர்ப்பு எழுதும் வேலையில் இரவும் பகலும் மும்முரமா இருக்காரு குன்ஹா. அதனால தலைசுற்றல் ஏற்பட்டு கோர்ட்டிலேயே மயங்கி விழுந்துட்டாரு. அவரை உடனடியா ஆஸ்பிட்டலுக்குக் கொண்டு போய் செக்கப் பண்ணியதில், பிரஷர் அதிகமாயிடிச்சின்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு பணிகளைத் தொடர ஆரம்பிச்சிட்டாராம் நீதிபதி. பெங்களூரு நீதிபதிகள் குடியிருப்பிலே உள்ள தன்னோட வீட்டில் சுதந்திரமா பணியாற்ற முடியாம சுற்றுப்புற இடையூறுகள் நிறைய இருப்பதாகவும் வேற குடியிருப்பு ஒதுக்கித் தரும்படியும் நீதிமன்ற ரெஜிஸ்ட்ராரிடம் கேட்டிருக்கிறாரு குன்ஹா. புதிய குடியிருப்பை ஒதுக்க ஏற்பாடு செய்துக்கிட்டிருக்குது கர்நாடக அரசு. முன்னே பெங்களூரில் ஸ்பெஷல் கோர்ட்டில் ஜெ. ஆஜரானப்ப வழக்கமான கோர்ட்டுக்குப் பதிலா, பாதுகாப்பு காரணங்களை முன்வச்சி பரப்பனஹள்ளி அக்ரகார சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினாங்க. இப்ப தீர்ப்புநாளில் ஜெ. ஆஜராகணும்ங்கிறதால எந்த கோர்ட்டுன்னு நீதிபதி குன்ஹாகிட்டே கர்நாடக அரசு கேட்டிருக்குது.''
""இந்த ஸ்பெஷல் கோர்ட்தான் விசாரணை நடத்தியது. அதனால் தீர்ப்பும் இங்குதான் தரப்படும். அதற்குத் தகுந்தமாதிரி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுங்க. வக்கீல்கள் எத்தனை பேர் இருக்கலாம்னு நான் பார்த்துக்கிறேன். மீடியா, கட்சிக்காரங்க இவங்களையெல்லாம் நீங்க பார்த்துக்குங்கன்னு லெட்டராகவே கொடுத்துட்டாராம் குன்ஹா. அந்த லெட்டரைக் கொண்டுபோய் கர்நாடக ஹைகோர்ட்டில் நிர்வாக விஷயங்களை கவனிக்கிற நீதிபதி மஞ்சுநாத்கிட்டே காட்டி ஆலோசனை கேட்டிருக்காங்க. அதற்கு மஞ்சுநாத்தோ, கொடுத்த வேலையை குன்ஹா கரெக்ட்டா செய்யக்கூடியவரு. அவரோட கடமையை அவர் செய்யட்டும்னு சொல்லிட்டாராம். அதனால செப்டம்பர் 20-ந் தேதியன்னைக்கு, பெங்களூரு செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில் 21 படிகள் ஏறி இரண்டாவது மாடியில் இருக்கிற ஸ்பெஷல் கோர்ட்டில் ஜெ. ஆஜராகணும். அதற்குள்ளே எந்த வகையில் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கான மனுக்களை மேல்கோர்ட்டுகளில் போடலாம்னு ஜெ. தரப்பு மும்முரமா இருக்குது.''