புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014

எனக்கும் ராஜபக்சவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ’கத்தி’ தயாரிப்பாளர் சுபாஷ்கான் விளக்கம்
கத்தி படத்தில் தமிழ் விரோத காட்சிகள் எதுவும் இல்லை. ராஜபக்சவுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எவ்வித தொழில் தொடர்பும் கிடையாது. இவ்வாறு படத் தயாரிப்பாளர் சுபாஷ்கான் தெரிவித்தார்.
விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு லைக்கா நிறுவன அதிபர் நெருக்கமானவர் என்றும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டங்களும் நடந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழ் அமைப்பு தலைவர்களை சந்தித்தனர். ராஜபக்சவுடன் பட நிறுவனத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து சீமான் உள்ளிட்ட பலர் ‘கத்தி’ படத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் ‘கத்தி’ பட சர்ச்சை குறித்து ‘லைக்கா’ பட நிறுவன அதிபர் சுபாஷ்கான் பேட்டி அளித்தார். அவர், ’’கத்தி படத்தில் தமிழ் விரோத காட்சிகள் எதுவும் இல்லை. ராஜபக்சவுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எவ்வித தொழில் தொடர்பும் கிடையாது. நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறினேன்.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த 27 வருடமாக தொழில் செய்து வருகிறேன். என் உறவினர்கள் பலர் இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு உள்ளனர். எனவே ‘கத்தி’ பட தயாரிப்பாளரான எனக்கும் ராஜபக்சவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

ad

ad