புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014



கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களில் நடக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி, ட்ராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசா ரணைக் குழு அமைக்க உத்தர விட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.கே.கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா தலைமையிலான முதல் அமர்வு. உத்தரவை அறிந்து முதல்வர் ஜெயலலிதா அப்-செட்.

ராமசாமியின் வழக்கறிஞர் சுந்தரவதனத்திடம் நாம் பேசியபோது, ""இந்த வழக்கு, 11-ந் தேதி வந்த போது, "அரசு தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே ஆய்வு நடத்தியிருந்த அதிகாரி சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார்' என்று அரசின் பதில் மனுவில் சொல்லப்பட்டிருக்க, அதைப் பார்த்ததும் தலைமை நீதிபதி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "அவரை ஏன் அடிக்கடி மாற்றுகிறீர்கள்?' என கேள்வி கேட்டுவிட்டு, சகாயம் தலைமையில் குழுவை அமைக்கவும் 2 மாதத்திற்குள் ஆய்வு அறிக் கையை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விட்டு வழக்கின் விசாரணை யை 28-க்கு தள்ளி வைத் தார்'' என்கிறார் பெருமிதத் தோடு.

வழக்கு போட்ட ட்ராஃபிக் ராமசாமியோ, ""தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நடத்த ஆளும் கட்சி தயாராக இல்லை. இந்தச்சூழலில், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த இந்த உத்தரவின் மூலம் முதல் முயற்சியை எடுத் திருப்பதாகத்தான் நினைக் கிறேன்'' என்கிறார் அதிரடியாக.


கிரானைட் விவகாரத் தில் தங்களுக்கு முழுமை யாக ஒத்துழைக்காத மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் களை மாற்றுவதற்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் லாபி செய்துகொண்டிருக்கிறது பி.ஆர்.பி. தரப்பு. இந்த நேரத்தில்தான் அவர் கள் தலையில் இடியாய் இறங்கி யிருக்கிறது இந்த உத்தரவு.  பி.ஆர்.பி. பக்கம் சாய்ந்த அதிகாரிகளும் கிலி பிடித்துப் போய் இருக்கிறார்கள்.

வைகுண்டராஜனோ தனது வழக்கறிஞரும் நண்பருமான மகா ராஜன் மூலம் நெல்லை உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ஆளும் கட்சிக்காக பணப்பட்டுவாடா செய்தபடி இருக் கிறார். ஏற்கனவே, "தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் கனிம மணல் அள்ளியது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை பெற்றிருக்கும் நிலையில்... சகாயம் எப்படி கனிம மணல் ஏரியாவுக்குள் விசாரணை நடத்த வரமுடியும்?' என்று தெம்பாகச் சொல்கிறார்கள் வைகுண்ட ராஜன் தரப்பில். 

நீதிமன்ற உத்தரவால் பதட்ட மான அரசு வழக்கறிஞர்களும் உயரதிகாரிகளும் ஜெ.விடம் சொல்ல, அவர் மூடு அவுட். ""அதிகாரத்தி லிருந்து யாரை பந்தாடிக் கொண்டி ருக்கிறோமோ அவர் தலைமையி லேயே குழு என்பதை அரசு தரப்பில் ஜீரணிக்க முடியவில்லை. உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை கேட்டு மேல்முறையீடு செய்யலாமா என உயரதிகாரிகளுடன் அவசர ஆலோ சனை நடத்தினார் ஜெயலலிதா'' என்றது கோட்டை வட்டாரம்.

இந்த உத்தரவு குறித்து சகாயத்திடம் நாம் கேட்டபோது, ""என்னிடம் கொடுக்கும் பொறுப்பை நேர்மையாக செய்வேன்'' என்றார் சளைக்காமல்

ad

ad