புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014

முன்கூட்டியே ராஜினாமா?
 ''எங்கே போனாலும் 'செப்டம்பர் 20-ம் தேதி என்ன நடக்கும்?’ என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!'' என்று சொன்னபடியே வந்தார்.
  ''சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வைத்துத்தானே அனைத்து நகர்வுகளும் இருக்கப்போகிறது. அதனால்தான் அனைவரும் அதைப்பற்றியே கேட்கிறார்கள்'' என்றோம் நாம். தலையாட்டியபடியே சொல்ல ஆரம்பித்தார் கழுகார். ''ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20-ம் தேதி வரப்போகிறது. தீர்ப்பின் வடிவத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா எழுதிக்கொண்டு வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்ற சிறப்பு நீதிமன்றம், நீதிபதியின் வீடு மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரையும் மத்திய, மாநில அரசின் உளவுத் துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். அனைவருமே கண்காணிக்கப்படுகின்றனர். நீதிபதி குன்ஹா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் மொபைல் நம்பர்களை உளவுத் துறையினர் வேவு பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் மூலமும் வாட்ச் செய்துகொண்டு இருக்கிறது. . .

ad

ad