புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014

ஜனா­தி­பதி மஹிந்தவுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களின் ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­ம்; இரா. சம்­பந்தன்

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசு­வ­தற்கு நாம் தயார். ஆனால் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களின்
ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மாகும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­மலை மாவட்ட எம்.பி. யுமான இரா. சம்­பந்தன் தெர­வித்தார்.
‘த இந்து’ பத்­தி­ரி­கைக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அளித்த பேட்­டியில் பொலிஸ் அதி­கா­ர­மற்ற 13வது திருத்­தச்­சட்டம் தொடர்பில் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயார் என்று கூறி­யி­ருந்தார். இந்த பேட்டி குறித்து எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே சம்­பந்தன் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது;
அர­சாங்­கத்­திற்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களின் பிர­சன்னம் அவ­சி­ய­மா­னது. எந்­த­வொரு நேரத்­திலும் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ரா­க­வுள்ளோம். பேச்­சு­வார்த்­தை­களில் சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களின் பிர­சன்னம் பேச்­சு­வார்த்­தையின் வெளிப்­ப­டைத்­தன்­மையை உல­கிற்கு உணர்த்தும் 13வது திருத்­தச்­சட்­டத்தை அமுல்­ப­டுத்தத் தயார் என்ற ஜனா­தி­ப­தியின் உறு­தி­மொழி வர­வேற்­கப்­பட வேண்­டி­யது பொலிஸ் அதி­கா­ரி­களை வழங்க முடி­யாது என்ற ஜனா­தி­ப­தியின் கருத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
தமிழ் மக்கள் பாது­காப்­பற்ற தன்­மையை உணர்ந்­த­மையும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அடிப்­படைக் கார­ணி­களில் ஒன்­றாகும். எனவே, பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாது­காப்பு அதி­கா­ரங்­களை கோரி­ய­தில்லை பொலிஸ் அதி­கா­ரங்­களை மட்டுமே கோருகின்றது. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்றை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

ad

ad