புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

தீவகமெங்கும் பதற்றம்! பாலியல் வல்லுறவு சந்தேக நபர்களிற்கு தீர்ப்பெழுத மக்கள் முயற்சி!!

புங்குடுதீவு மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் தற்போது புதிதாக கைதான ஐவரையும் கையளிக்க கோரி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தையடுத்து மேலதிக கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனரென்பது பற்றி தகவல்கள் இல்லாதுள்ள நிலையினில் ஊர்காவற்துறை மற்றும் குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையங்கள் மக்களது சுற்றி வளைப்பிற்குள்ளாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐவரையும் மக்கள் தம்மிடம் ஒப்படைக்க கோரி பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை அவர்கள் நடத்துகின்றனர அத்துடன் சந்தேகநபர்களை வெளியே கொண்டுசெல்லவிடாது தடுக்க வீதி மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். வீதிகள் எங்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ரயர்களை கொழுத்தியுமுள்ளனர்.அதனால்; பதட்டமான நிலைமை தொடர்கின்றது.

மாணவியின் கொலை தொடர்பில் கடந்த வியாழக்கிழமை சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களென உறுதிப்படுத்தப்பட்ட ஜவர் பதுங்கியிருந்த நிலையினில் புங்குடுதீவிலிருந்து வெளியேற முற்பட்ட நிலையினில் அகப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவருமே 22 முதல் 25 வயதிற்கிடைப்பட்டவர்களென கூறப்படுகின்றன.

ஆர்ப்பாட்;டகாரர்கள் குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தினுள் உட்புக முற்பட்டவேளை நடந்த வன்முறையினில் பொலிஸார் சிலர் காயமடைந்துள்ளனர்.

ad

ad