புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை - தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி கண்டனம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டது என்பது சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ்ப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை தெட்டத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. போர் நடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தாயகத்தில் இன்னமும் தொடர்கின்றன. தமிழீழப்  பெண்கள் மீது  நடக்கும் வன்முறைகள் ஓரு இனஅழிப்பின் வடிவமாகவே பார்க்க வேண்டும் என்று கடந்த 09.05.2015 அன்று யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டார்கள். போரின் பின்பான காலத்தில் கூட சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிட்ட ரீதியில் தமிழ்ப் பெண்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

பாலியல்வன்புணர்வுக்கு  பாடசாலை மாணவி   உள்ளாக்கி கொலை செய்யப்பட்டதை யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பாகிய நாம் கடுமையாக கண்டிக்கின்றோம் .   மனித உரிமை நிறுவனங்கள், பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நிறுவனங்கள்,உலகநாட்டு பெண்கள் அமைப்புக்களின் பார்வைக்கு பாடசாலை மாணவிக்கு நடந்த அநியாயத்தைக் முன்னிலைப் படுத்துகின்றோம். சர்வதேசரீதியாக எடுத்துரைப்போம். பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவும், தமிழின அழிப்புக்கு காரணமான சிறீலங்கா அரசுமீது ஒர் சர்வதேச விசாரணையை ஏற்படுத்தி தண்டணை வழங்கவேண்டும்.தமிழ்ப் பெண்களாகிய எமது நிறைவான உரிமைகள் தமிழீழ விடுதலையுடன் கூடியதாகவே இருக்கின்றது என்ற உண்மையை உலகிற்கும், மானுடத்தை நேசிக்கும் அமைப்புகளுக்கும் புரியவைப்போம்.

தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி

ad

ad