புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

ஐந்தாவது சந்தேக நபர் சுவிசில் இருந்து சென்றவர் ஆவார் வித்திய சம்பவத்தில் திருப்பம்




புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட ஐவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ள நிலையில்இ
அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொலிஸாரை பின்தொடர்ந்தனர். வீதிகளை முற்றுகையிட்டு ரயர்களைப் போட்டுக் கொழுத்தி ஆர்ப்பரித்தனர்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பொலிஸார் சந்தேகநபர்களை ஊர்காவற்றுறைக்குக் கொண்டு சென்றனர். அதனைக் கேள்வியுற்ற பெதுமக்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டு வீதிகளையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடல்வழியாக சந்தேகநபர்களை குறிகாட்டுவானுக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். அதனையும் கேள்வியுற்ற பொதுமக்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலின் போது பொலிஸார் இருவர் காயமடைந்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ம.சிவதேவன், துசாந்தன், சசிதரன், சந்திராஜ, நிசாந் உள்ளிட்டோர் வயது முறையே 31, 31, 26, 25, 23 ஐ உடையவர்களாவர். இந்த ஐந்து பெரும் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகிறது.
அத்துடன் இவர்களது கைதினை அடுத்து மற்றுமொரு சந்தேகநபரும் மக்களினால் பிடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டு பொதுமக்களினால் தாக்கப்பட்டார். இவர் சுவிசில் இருந்து சென்றவர் எனவும் தெரிய வருகிறது.
உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்த பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வேலணை பிரதேசசபை தலைவர் தவராசா ஆகியோர் தலையிட்டு மக்களிடையே சமரசத்தை ஏற்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மரணமடைந்த வித்தியா கொலை செய்யப்பட்ட இடத்தில் நின்று கொண்டு பிரேதத்தை மீட்க உதவியதாகவும் ,அவர்கள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவ்வாறு நடந்து கொண்டதாகவும் மக்கள் எமது செய்தியாளரிடம் குறிப்பிட்டனர்.
அத்துடன் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரிடம் சந்தேகநபர்களின் விபரங்களை அடங்கிய கைத்தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கிய கையேடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
விரிவான விபரங்களும் விரைவில்

ad

ad