புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியின் கொலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன:-

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வன்புணர்வுக்குஉட்படுத்தி கொலை செய்யப் பட்டமையை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் தொடர்ந்து போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இன்றைய தினம் காலையில் யாழ்.இளைஞர்கள் சிலரின்ஏற்பாட்டில்  நல்லூர் முன்றலில் கண்டன போராட்டம்இடம்பெற்றது.
இதன் போது சட்டவிரோத குற்றவாளிகளுக்கு ஆதரவாகசட்டத்தரணிகள் ஆஜார் ஆக கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியானசிவலோகநாதன் வித்தியா (வயது 18) எனும் மாணவிகடந்த புதன் கிழமை பாடசாலைக்கு செல்லும் வழியில்கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்யப்பட்டு இருந்தார்.அந்த சம்பவத்தை கண்டித்தேபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 

ad

ad