புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2015

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத் உடலுக்கு ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி


மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத்தின் மனைவியும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் இன்று காலை 8 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. சுலோச்சனா சம்பத் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் தாயார் ஆவார்.

இவரது கணவர் ஈ.வி.கே.சம்பத் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராவார். பெரியாரின் வளர்ப்பு மகனும் ஆவார்.சம்பத் மறைவுக்கு பிறகு சுலோச்சனா சம்பத் அ.தி.மு.க. வில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். அ.தி.மு.க. வில் அமைப்பு செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்
 
மறைந்த  சுலோச்சனா சம்பத்தின் உடல், சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அவரது வீட்டில்  பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சுலோச்சனா சம்பத் மறைவு செய்தியை கேட்டதும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்அமைச்சருமான ஜெயலலிதா மதியம் சுலோச்சனா சம்பத் இல்லத்திற்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார். 

அவருடன் சசிகலாவும் உடன் வந்தார். ஜெயலலிதாவை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாசலில் நின்று அழைத்து சென்றார். சுலோச்சனா சம்பத் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஜெயலலிதாவிடம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன் மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தார். இளங்கோவன் மனைவி மற்றும் சுலோச்சனா சம்பத் மகன்கள் மற்றும் மகள்களிடம் ஜெயலலிதா துக்கம் விசாரித்தார். சுமார் 5 நிமிடம் வரை அவர் அங்கிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

ad

ad