6 ஜூன், 2015

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; முதன் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் வாவ்ரின்கா

S


கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது.  இதில் உலகின் 8–ம் நிலை வீரரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)– 14–ம் நிலை வீரர் சோங்கா (பிரான்ஸ்) எதிர்கொண்டு விளையாடினார். 

பரபரப்பான இந்த ஆட்டத்தில்  6-3, 6-7, 7-6 ,6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் சோங்காவை வீழ்த்தி வாவ்ரின்கா இறுதி போட்டிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல் முறையாகும்.