6 ஜூன், 2015

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்


அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயருமான சுலோச்சனா சம்பத் காலமானார். அவருக்கு வயது 86. மாரடைப்பு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலை காலமானார். 

சுலோச்சனா சம்பத்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வேப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.