6 ஜூன், 2015

தமிழ் இனக்கொலையாளி சிறிலங்காவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் கையெழுத்து வேட்டையில் பங்கேற்பீர்- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

எமது தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும், தமிழ்ப்பெண்களை கற்பழித்த சிறிலங்கா அரசை சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்தும்
கையெழுத்து வேட்டையில் தமிழ்மக்கள் அனைவரையும் www.tgte-icc.org என்ற இணையத்தளத்திற்கு சென்று பங்குபற்றுமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசால் முன்னெடுக்கப்பட்ட இந்த கையெழுத்து வேட்டை தமிழர்களின் மானத்திற்கான நடவடிக்கை என்றும், 90,000 தமிழ் போர் விதவைகளுக்கும், அனாதைகள் ஆக்கப்பட்ட எமது சகோதரர்களுக்கும், கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட எம் இனத்திற்கும், ஆயிரக்கணக்கில் காணாமல் போனவர்களுக்கும் நீதி கேட்கும் இந்த கையெழுத்து வேட்டையில் அனைவரையும் பங்குபற்றுமாறு இவ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
www.tgte-icc.org இற்கு கையொப்பம் இட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்கு இச்செய்தியை அனுப்பி கையெழுத்திட வேண்டுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.