25 செப்., 2015

சவுதி அரேபியாவில் மெக்கா மசூதிக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 725 பேர் உயிரிழப்பு
சவுதி அரேபியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 725 பேர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு வாரத்தில் இரண்டாவதுமுறையாக மெக்காவில் மிகப்பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. மெக்கா மசூதிக்கு வெளியே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இவர்கள் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஹஜ் புனித யாத்திரையின்போது கூட்டம் அதிகமானதால் திடீரென நெரிசல் ஏற்பட்டு இந்த விபரீதம் நடந்துள்ளது. 

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி மெக்காவில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது.