25 செப்., 2015

தீவுப்பகுதியில் தொடரும் அவலம்!!பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

அண்மைக்காலமாக கற்பழிப்பு ,கொலை, கொள்ளை என யாழ்ப்பாணம் தீவுப்பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது. வித்தியா கொல்லப்பட்டதை தொடர்ந்து பல
சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமுள்ளது. நேற்று முன்தினம் பாடசாலை மாணவி ஒருத்தியை
40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவன் பலவந்தமாக கடத்தி சென்றுள்ளான்.
பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை அவ்வழியால் சென்ற ஆசிரியர் ஒருவர் அவதானித்துள்ளார்.
உடனடியாக புத்திசாதுரியமாக செயற்பட்ட அவர்,அருகில் இருந்த இளைஞர்களையும் அழைத்து ,அந்த வீட்டிற்குள் சென்ற போது ,7வயது சிறுமி ஒருத்தியை அக்குடும்பஸ்தர் பலாத்காரம் செய்யமுயன்ற வண்ணம் இருந்துள்ளார்.
கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காமுகனை முறையாக கவனித்த அப்பகுதி மக்கள் ,சிறுமி காப்பாற்றப்பட்டமையால்,இந்த விடயத்தை பொலிசுக்கு கொண்டு செல்ல விரும்பாது விட்டுவிட்டனர்.
நையப்புடைக்கப்பட்ட அந்த காமுகன் எச்சரிக்கை  செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டான்.
சிறுமியின் எதிர்காலம் கருதி இந்த விடயத்தை பெரிதாக்க விரும்பவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் காரைநகர் பிரதேச சபைக்கருகில் இடம்பெற்றுள்ளது. 
அடிக்கடி நடைபெறும் இச்சம்பவங்கள் வித்தியா கொலையாளிகளின் வழக்கை திசை திருப்புவதாக அமையக்கூடாது என அப்பகுதி மக்கள் கருத்துதெரிவித்தனர்.