25 செப்., 2015

நியூசிலாந்து புதிய கொடிக்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடி

தங்கள் நாட்டுக்கென புதிய தேசியக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து, அதற்கான பி பி சி 
போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது.
Image copyrightBBC World Service
Image captionஇதற்கு முன்பாக இறுதிப் போட்டிக்கு தேர்வான நான்கு கொடிகளின் மாதிரிகள்.
இந்தப் புதிய கொடியை வடிவமைப்பதெற்கென போட்டிகள் நடந்து இறுதிப் பட்டியலுக்கு நான்கு கொடிகளின் மாதிரிகள் தேர்வுசெய்யப்பட்டன.
இம்மாதத் துவக்கத்தில் இறுதிப்பட்டியலுக்கான நான்கு கொடிகள் முன்வைக்கப்பட்டபோது, பெரும்பாலானவர்கள் அந்தத் தேர்வு குறித்து அதிருப்தி அடைந்தார்கள். புதுமையாக இல்லையென்றும் சலிப்பூட்டும் வகையில் இருக்கிறதென்றும் மிக கார்ப்பரேட் தனமாக இருக்கிறதென்றும் இந்தக் கொடிகளைப் பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
Image copyrightnz government
Image captionபொதுமக்களின் வற்புறுத்தலையடுத்து போட்டிக்குச் சேர்க்கப்பட்டிருக்கும் முக்கோணங்களைக் கொண்ட புதிய மாதிரி.
வெல்லிங்டனைச் சேர்ந்த ஆரோன் டஸ்டின் என்பவரும் இந்தப் போட்டிக்கென ஒரு கொடியை வடிவமைத்து அனுப்பியிருந்தார். ஆனால், இறுதிப் பட்டியலில் அந்தக் கொடி தேர்வாகவில்லை.
ஆனால், அந்தக் கொடியையும் இறுதிப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கென 50,000 கையெழுத்துக்களும் பெறப்பட்டன.
ஆனால், பல முக்கோணங்களை உள்ளடக்கிய இந்தக் கொடிக்கு நியூசிலாந்து ஃபர்ஸ்ட் என்ற கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நாஜி வீரர்களின் ராணுவ நிலைகளில் இருந்த சின்னங்களைப் போல இந்தக் கொடி காட்சியளிப்பதாக அந்தக் கட்சி கூறியது.
Image copyrightPUBLIC DOMAIN
Image captionயூனியன் ஜாக்கை உள்ளடக்கிய நியூசிலாந்தின் தற்போதைய தேசியக் கொடி.
இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் இந்த ஐந்து கொடிகளிலிருந்து ஒரு கொடி தேர்வுசெய்யப்படும்.
அதற்குப் பிறகு, இப்படி தேர்வுசெய்யப்படும் கொடியும் தற்போதைய தேசியக் கொடியும் மட்டும் வாக்காளர்களின் முன்வைக்கப்பட்டு, அதிலிருந்து இறுதியாக தேசியக் கொடி தேர்வுசெய்யப்படும்.
இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கும்.
தற்போதைய கொடியில் யூனியன் ஜாக் சின்னமும் நட்சத்திரங்களும் இடம்பெற்றிருக்கின்றன.