புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2015

புங்குடுதீவு சிவலைபிட்டி முன் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா


23-09-2015 இன்று மிகவும் சிறப்பான முறையில் சிவலைபிட்டி முன் பள்ளி வேலனை வலய பிரதேச செயலாளர் ச.மஞ்சுளா அவர்களால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக
திறந்து வைக்கப்பட்டது .
உண்மையில் இது ஒரு மகிழ்ச்சி பூர்வமாகவும் நெகிழ்சி மிக்க தருனமாகவும் இருந்தது
ஆம் இந்த நேரத்தில் இம் சிறார்கள் பள்ளி ஒரு அழகாக இருந்தாலும் இதற்காக தங்களால் இயன்ற அளவு உதவிகளை வழங்கி சிறப்பாக இந்த சிறார்கள் பள்ளி அமைவதற்கு வித்திட்ட அரச நிறுவனங்கள் ,தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் , புலம் பெயர் உறவுகள் , நலன் விரும்பிகள் நிலைய உறுப்பினர்கள், பெற்றோர்களை என்றும் மறந்துவிட முடியாது
அந்த வகையில் நான் புங்குடுதீவின் ஒரு பொதுமகன் என்ற வகையிலும் ,சிவலைபிட்டி ச.ச.நிலைய உறுப்பினர் என்ற வகையிலும் 2010 ஆண்டில் இருந்து எமது பாசமிகு உறவுகளால் செய்யப்பட்ட அந்த உதவிகளை மீளவும் அசைபோட்டு பார்ப்பது சிறந்தது என நினைக்கின்றேன்

புங்குடுதீவு 04 சேர்ந்த - சுப்பையா சண்முகம் அவர்களால் 2010ம் ஆண்டு இக்காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டது
வேலனை பிரதேச சபையால் -2010ம் ஆண்டு முன் பள்ளி கட்டிடத்திற்காக ரூபா-500000 {ஐந்து இலட்சம் } ஒதுக்கப்பட்டு அவர்களாலேயே கட்டப்பட்டது எனிலும் வேலையை முழுமையாக செய்யமுடியாமல் ஒரு பகுதி வேலைகளையே செய்யமுடிந்து
பாரளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராசா அவர்களால் -2012 ம் ஆண்டு முன் பள்ளி தளபாடத்திற்காக ரூபா 25000 {இருபத்தையாயிரம்} ஒதுக்கப்பட்டு அவர்களாலேயே தளபாடமும் தரப்பட்டது
திரு மாவை சேனாதிராசா அவர்களால் மீண்டும் - 2013 ம் ஆண்டு ரூபா 25000 {இருபத்தையாயிரம் }ஒதுக்கப்பட்டு கற்றல் உபகரணங்கள் ,தளபாடங்கள் அவர்களாலேயே தரப்பட்டது
முன்னால் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா , பராளுமன்ற உறுப்பினர்களான சில்வதிரி அலஸ்டின் ,மு .சந்திரகுமார் அவர்களால் -ரூபா 125000 {ஒருலட்சத்து இருபத்தையாயிரம்}ஒதுக்கப்பட்ட நிதியில் முன் பள்ளி 4 பக்கமும் சுவர் கட்டப்பட்டது
பாராளுமன்ற உறுப்பினர் திரு விந்தன் கனகரத்தினம் அவர்களால் 2014ம் ஆண்டு ரூபா - 30000 { முப்பதாயிரம் } ஒதுக்கப்பட்ட நிதியில் வெளிக்கள விழையாட்டு உபகரணங்கள் அவர்களாலேயே தரப்பட்டது
திரு கனகசபை பரமேஸ்வரன் (சதீஸ் ) சுவீஸ் அவர்களால் 2015 ம் ஆண்டு முன் பள்ளி கட்டட வேலைத்திட்டத்திற்காக -ரூபா 150000 { ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சி.ச.ச.நிலையத்திடம் வழங்கப்பட்டது
திரு ஶ்ரீகானந்தன் கேதினி லண்டன் அவர்களால் 2015 முன் பள்ளி கட்டத்தில் சமையல் அறை அமைப்பதற்காக ரூபா 51000 {ஐம்பத்தொராயிம்} சி.ச.ச.நிலையத்திடம் வழங்கப்பட்டது
திரு பசுபதி ஜீவன் நோர்வே அவர்களால் 2015ம் ஆண்டு ரூபா 15000 { பதினையாயிரம்} முன் பள்ளி முற்றத்திற்கு 10 லோட் மணல் பரவுவதற்காக சி.ச.ச.நிலைத்திடம் வழங்கப்பட்டது
திரு பேரம்பலம் சண்முகராசா சுவிஸ் அவர்களால் 2015 ம் ஆண்டு ரூபா 20000 {இருபதாயிரம் } முன் பள்ளி மின் இணைப்பு வேலைக்காக சி.ச.ச.நிலையத்திடம் வழங்கப்பட்டது
திரு தளையசிங்கம் வாசு பிரான்ஸ் அவர்களால் 2015 ம் ஆண்டு ரூபா 18000 { பதினெட்டாயிரம்} முன் பள்ளி பெயர் பலகை செய்வதற்கு சி .ச.ச.நிலையத்திடம் வழங்கப்பட்டது
முன் பள்ளி கட்டட வேலைதிட்டத்திற்கு சி.ச.ச.நிலைய பிரான்ஸ் கிளையால் 2015 ம் ஆண்டு ரூபா 30000 {முற்பதாயிரம்} வழங்கப்பட்டது
முன் பள்ளி கட்டட வேலைக்காக 2015 ம் ஆண்டு ரூபா 50000 { ஐம்பதாயிரம் } வழங்கப்பட்டது
முன் கட்டடத்திற்கான வர்ணம் வகைகள் ,விழையாட்டு உபகரணங்கள் , கற்றல் உபகரணங்களை காருண்யம் பவுண்டேசன் அவர்கள் வழங்கியிருந்தார்கள்
முன் பள்ளி மாணவர்களுக்கு திரு கனேசு இலங்கநாதன் அவர்கள் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு தொகையை திரு பொன்னுத்துரை புஸ்பராசா , இராசரத்தினம் , மகோஸ்வரன் , ஶ்ரீதரன் ரவிதரன் அவர்கள் வழங்கி வருகின்றனர்
பாராளுமன்ற உறுப்பினர் தவராசா அவர்களால் பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கப்பட்டது
இத்துடன் இம் முன் பள்ளி சிறப்புற அமைய தங்களை முழுமையாக அர்ப்பணித்து அனைத்து வேலைகளையும் செய்த நல் உள்ளங்களையும் மனதில் நிறுத்தி நிமிர்ந்து நிற்கும் சிவலைபிட்டி சிறார்கள் பள்ளியுடன் தொடர்ந்தும் கைகோர்ப்போம்

ad

ad