25 செப்., 2015

சரவணையில் நண்பனை அடித்துமயக்கி விட்டு புது மனைவியை கற்பழி த்தனர்

நண்பனை அடித்து மயக்கமடையச் செய்து விட்டு அவரின் மனைவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்திய இருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் சரவணையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் தொர்பில் தெரியவருவது,
8 மாதங்களுக்கு முன்னரே சரவணையைச் சேர்ந்த குறித்த நபருக்கு திருமணம் இடம்பெற்றது. இவருடன் அதே இடத்தைச் சேர்ந்த நபரும் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரும் மேசன் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நண்பரின் வீட்டுக்குள் நேற்று அதிகாலை புகுந்த இருவரும் அவரைக் கொட்டனால் பலமாகத் தலையில் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழவே, அவரின் மனைவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
பின்னர் ஒருவாறாக அவர்களிடம் இருந்து தப்பி வந்த பெண் அயலாரை உதவிக்கு அழைத்து கணவனை அவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.பின்னர் தனக்கு நேர்ந்த நிலை குறித்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளில் களமிறங்கிய பொலிஸார் நேற்று சந்தேக நபர்கள் இருவரையும் உடன் கைது செய்தனர்.