புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

உள்ளூர் பொறிமுறைக்கு அனைத்து நாடுகளின் ஆதரவும் எதிர்பார்ப்பு


இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் இறுதி வரைவு எதிர்வரும் ஓர் இரு நாட்களில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அப் பிரேரணையின் அடிப்படை வரைவு நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலின் போது குறித்த பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலை அதற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனீவாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க கலந்துகொண்டுள்ளனர்.
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த பிரேரணையை நிராகரிப்பதாக ரவிநாத ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அவ் பிரேரணை மூலம் இலங்கையினுள் தேசிய ஒற்றுமையைக் கட்டிக்காக்க உதவி புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினால் சரியான உள்ளூர் பொறிமுறையொன்றினை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயற்படுத்துவதற்கு அனைத்து நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரும் குறித்த பிரேரணை செப்டெம்பர் மாதம் 30ம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னர் அப் பிரேரணையின் இறுதி வரைவினை விரைவில் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளிடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ad

ad