புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

சாலை குழியில் விழுந்த நபர்: உயிருடன் புதைத்த சாலை செப்பனிடும் பணியாளர்கள்


மத்திய பிரதேசத்தில் குழியில் விழுந்த நபரை சாலை செப்பனிடும் பணியாளர்கள் உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த லதோரி பர்மன் (45), கடந்த வெள்ளிக்கிழமை ரிஷி பஞ்சமி கண்காட்சிக்கு தனது மனைவியுடன் சென்றுள்ளார்.
பிறகு அவரது மனைவி அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பர்மன் மதுக்கடையில் மது அருந்திவிட்டு தனது கிராமத்திற்கு நடந்து சென்ற போது, சாலையில் உள்ள பெரிய குழியில் விழுந்தார்.
அந்த குழி இருந்த சாலையை தார் ஊற்றி சமம் செய்யும் பணி நடந்து கொண்டிருந்துள்ளது.
இந்நிலையில் பர்மன் இருப்பது தெரியாமல் ஊழியர்கள் இருவர் அந்த குழியை அடைத்து தாரை ஊற்றி சமம் செய்துவிட்டனர்.
மறுநாள் காலையில் தார் சாலையில் ஒரு இடத்தில் மனிதனின் கை வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அங்கு தோண்டியபோது அடைக்கப்பட்ட குழியில் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். அதை தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த பொலிசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்

ad

ad