புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய செயலணி

வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் பேசுவதற்கு 7 பட்டதாரிகள் மற்றும் 7 மாகாணசபை உறுப்பினர்கள் கொண்ட செயலணி உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாணசபை ஆளுகைக்குட்பட்ட வெற்றிடங்களை நிரப்புமாறு பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இரண்டாவது தடவையாக வடமாகாண சபையினர் பட்டதாரிகளை அழைத்துப் பேசியிருந்தனர். இதன்போது இரு பகுதியினருக்குமிடையில் கடுமையான வாய்தர்க்கம் இடம்பெற்று ஒரு வாறாக செயலணி ஒன்றை உருவாக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புமாறு மத்திய அரசை கோரும் பிரேரணை சபையில் மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
        
        

ad

ad