புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வு

நேற்று  யாழ் சர்வதேச திரைப்படவிழா இறுதி நாள் நிகழ்வுகள் மாலை 6 மணியளவில் கார்கில்ஸ் சதுக்க திரையரங்கில் நடைபெற்றது. 


இவ்விழா கடந்த 15 ஆம் திகதி முதல் கார்கில்ஸ் சதுக்க திரையரங்கம், பல்கலைகழகத்தின்  கைலாசபதி மண்டபம்,பொது நூலக கேட்போர் கூடம் போன்றவற்றில் இலவச காட்சிப்படுத்தல்கள் இடம் பெற்றிருந்த பொது மக்களின் வாக்குகளும் பதியப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருது அர்த்தனாஸ் யேசுராசாவுக்கு ஆர்.சிவச்சந்திரன், ஆர் .கிருஷ்ண குமார், மூத்த இசையமைப்பாளர் கண்ணன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

பார்வையாளர்களின் விருது வென்ற திரைப்படமாக - பை (தபாக் ) தெரிவு செய்யப்பட்டது. இந்த திரைப்பட இயக்குநர் எஸ் .சிவரா ஜுக்கு, யாழ் பல்கலை கழக துணை வேந்தர் வசந்தி  அரசரட்ணமும்  இயாழ் பல்கலைகழக பேராசிரியர் ஞானகுமாரனும்,நாடக தலைமை அலுவலர் பிரவின் டேவிடும்  விருது வழங்கினர்.

சிறந்த அரங்கேற்ற திரைப்படமாக தஸ்டேஜ் ஒப் பமிலியர் திரைப்படம் நடுவர்களின் தீர்மானத்தால் தேர்வானது .  அதன் இயக்குநர் மலித்ஹகொடவக்கு, யாழ். சர்வதேச திரைப்பட விழாத் தலைவர் பாக்கியநாதன் அகிலன், யாழ் சர்வதேச திரைப்பட விழா இயக்குநர் திருமதி அனோமா ராஜ கருணா, பிரசன்னா விதானகே  ஆகியோர் விருது வழங்கினர்.

கடந்த 15ஆம் திகதி முதல் நடை பெற்ற யாழ்.சர்வதேச திரைப்பட விழாவில் 12 அரங்கேற்ற திரைப்படங்களும்23 குறும்படங்களும் திரையிடப்பட்டன. இலங்கை இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்ரேலியா,மலேயா மற்றும் கனடாவில் தயாரிக்கப்பட்ட 12 அரங்கேற்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. விருது வழங்கும் நிகழ்வைத்தொடர்ந்து லெனின் எம் சிவமின் துப்பாக்கியும்
மோதிரமும் திரையிடப்பட்டது. 

    
    

ad

ad