புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

D.S.P. விஷ்ணுப்பிரியா வழக்கை திசைதிருப்பவே எனது கணவர் கைது: அட்டாக் பாண்டி மனைவி பரபரப்பு பேட்டி


மதுரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டு, இன்று காலை மதுரை கொண்டுவரப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மனைவி தயாளு செய்தியாளர்களிம் பேசுகையில், டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை திசை திருப்பவே எனது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆளும் கட்சி சதி செய்கிறது. பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் எனது கணவருக்கு எந்த சம்மந்தமும் கிடையாது. அவர் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டார். 

இரண்டரை வருடம் தலைமறைவாக இருந்த எனது கணவரிடம் நான் போனில் கூட பேசவில்லை. ஏதாவது பேச வேண்டும் என்றால் வழக்கறிஞர் மூலம் தான் கேட்பேன். கடந்த வாரம் கூட வழக்கறிஞர் மூலம் தான் ஸ்கூல் பீஸ் கட்ட பணம் கேட்டேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். 4 முறை முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என்னைக் கூட பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தேன். என் கணவரை என்கவுண்டர் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளேன். மதுரை அழைத்து வந்துள்ள எனது கணவரை சந்திக்க எனக்கு போலீசார் அனுமதி மறுக்கிறார்கள் என்றார். 

ad

ad