புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2015

14 ஆண்டுகால சாதனையை முறியடித்த கருணாரத்னே- சந்திமால் ஜோடி

record_001
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 484 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை 2 விக்கெட்டுக்கு 250 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கருணாரத்னே 135 ஓட்டங்களுடனும், சந்திமால் 72 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.
தொடர்ந்து நிதானமாக ஆடிய சந்திமால் சதம் அடித்தார். தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே 186 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சந்திமால் 151 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அணித்தலைவர் மேத்யூஸ் தன் பங்கிற்கு 48 ஓட்டங்கள் எடுத்தார். அறிமுக வீரரான சிறிவர்த்தனே (1) ஏமாற்றினார்.
குஷால் பெரேரா (23)இ தமிங்க பிரசாத் (13) நிலைக்கவில்லை. ஹேராத் (0),நுவன் பிரதீப் (0) டக்-அவுட் ஆக, இலங்கை முதல் இன்னிங்சில் 484 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
தரிந்து கவுஷால் (9) ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் சார்பில், பிஷூ 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை:-
இந்தப் போட்டியில் கருணாரத்னே- சந்திமால் ஜோடி 238 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கை ஜோடி அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.
முன்னதாக 2001ம் ஆண்டு இதே காலே மைதானத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சங்கக்காரா- ஜெயவர்த்தனே அடித்த 162 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.
தற்போது அந்த சாதனை 14 ஆண்டுகளுக்கு பிறகு இளம் வீரர்களான கருணாரத்னே- சந்திமால் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ad

ad