புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2015

கருணா கைதாவாரா .கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை


முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் கருணாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவிற்கு கருணா அண்மையில் அழைக்கப்பட்டு நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருணாவிற்கு தெரிந்தே ரவிராஜ் கொலை மேற்கொள்ளப்பட்டது என புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மீண்டும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.
2006ம் ஆண்டு நவம்பர் மாதம் ரவிராஜ் கொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலைச் சம்பவம் n;தாடர்பிலான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிப்பதாக சிங்கள பத்திரிகையொன்று தெரிவிக்கின்றது.
எவ்வாறெனினும் தாம் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை, தம்மை எவரும் கைது செய்ய முடியாது என கொழும்பு ஊடகமொன்றுக்கு கருணா நேர்காணல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad