புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2015

காதலுக்கு மரியாதை- மனைவியை காதலனுக்கு தாரை வார்க்கும் சென்னை என்ஜினீயர்

சினிமாவில் வரும் சம்பவம் போல நடந்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம்
டாக்டர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (23). இருவரும் பள்ளியில் படித்த போது காதல் மலர்ந்துள்ளது. பிரசாத் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் லலிதாவின் காதலுக்கு அவருடைய வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். லலிதாவின் படிப்பையும் பாதியில் நிறுத்தினர்.
இருப்பினும் காதலர்கள் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இதை அறிந்த லலிதாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி லலிதாவை, அவருடைய உறவினரான சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வரும் ஒருவருக்கு ஜூன் 11-ந்தேதி கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
முதல் இரவில் ஆயிரம் கனவுகளுடன் சென்ற சென்னை என்ஜினீயரிடம் தனது காதல் கதையை லலிதா கண்ணீர் மல்க கூறினார். இதை கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்த என்ஜினீயரான அவருடைய கணவர் பின்னர் மனதை தேற்றிக்கொண்டு காதலனுடன் சேர்த்து வைப்பதாக லலிதாவிடம் உறுதி கூறினார்.
இதையடுத்து லலிதாவின் காதலன், அவருடைய பெற்றோரை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி என்ஜினீயர் விளக்கி கூறி, லலிதாவுக்கும், பிரசாத்திற்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் பெற்றார். பின்னர் இது பற்றி தனது பெற்றோர், லலிதாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் லலிதாவையும், என்ஜினீயரையும் சென்னையில் வாடகை வீடு பார்த்து தங்க வைத்தனர். இருவரும் தம்பதி போல் நடித்து காலத்தை கடத்தினர்.
இதற்கிடையே ஆடி மாதம் வந்ததால் லலிதாவை ஊருக்கு அழைத்து வந்த பெற்றோர், அவரை கலபுரகி மாவட்டம் சுர்புரா தாலுகாவில் உள்ள தாய் வழி பாட்டி வீட்டில் தங்க வைத்தனர். அப்போது லலிதா, தனது காதலன் பிரசாத்துடன் செல்போனில் பேசி வந்தார்.
பின்னர் பாட்டி வீட்டில் இருந்து லலிதா வெளியேறி பிரசாத்துடன் கங்காவதி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனால் லலிதாவின் பெற்றோர், என்ஜினீயரின் பெற்றோர், பிரசாத்தின் பெற்றோர் ஆகியோரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறைப்படி என்ஜினீயரிடம் விவாகரத்து பெற்று, காதல் ஜோடியை சேர்த்து வையுங்கள் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.
இதனால் தாலி கட்டிய மனைவியை காதலனுடன் திருமணம் செய்து வைப்பதற்காக விவாகரத்து வழங்க கணவரும் சம்மதம் தெரிவித்தார். இதற்காக லலிதாவும், பிரசாத்தும் என்ஜினீயருக்கு நன்றி தெரிவித்தனர்.
தற்போது லலிதாவும், என்ஜினீயரும் விவாகரத்து கோரி கோர்ட்டை அணுகி உள்ளனர். விவாகரத்து கிடைக்கும் வரை லலிதா கங்காவதியில் உள்ள பெண்கள் நல காப்பகத்தில் தங்கி இருக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

ad

ad