புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2015

அடையாளம் காணுமாறு கோரிக்கை

நாவற்குழிப் பகுதியில் ரயிலில்   மோதுண்டு சாவடைந்த நபரின் சடலம் இதுவரை உரிமை கோரப்படாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின்
சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்தை அடையாளம் காட்டி உதவுமாறு பொதுமக்களை சாவகச்சேரி பொலிஸார் கேட்டுள்ளனர். 
கடந்த 5 ஆம் திகதி இரவு  ரயிலில் மோதுண்டு காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்சேர்க்கப்பட்டு சாவடைந்த  நபர் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் நேற்று முன்தினம் சாவகச்சேரி நீதிமன்றில் சடலம் எவராலும் அடையாளம் காணப்படாத நிலையில் வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதென அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். 
அறிக்கையைப் பார்வையிட்ட  நீதிவான்  சடலம் அடையாளம் காணப்படும் வரை  வைத்தியசாலை  சவச்சாலையில் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர்பாக ஊடகங்கள் ஊடாக புகைப்படத்துடன் செய்தி பிரசுரிக்குமாறும் பொலிஸாருக்குக் கட்டளையிட்டார் .

ad

ad