புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 அக்., 2015

தென்பகுதியில் வன்புணர்வு இடம்பெற்றால் மூன்று நாட்களுக்குள் மரபணு பரிசோதனை வடக்கில் ஏன் பலமாதக் கணக்காகின்றதுசந்தேகநபர்கள்

புங்குடுதீவு வித்தியா கொலைவழக்கு இன்றைய விசாரணை என்ன? வித்தியா சந்தேகநபர்கள், நீதிவானை நோக்கி
கேள்விகளை தொடுத்தனர்
மேற்கொள்ள முடியுமெனில் இதே வன்புணர்வு இடம்பெற்றால் மரபணு பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு ஏன் பலமாதக் கணக்காகின்றது என வித்தியா வன்புணர்வு கொலைச் சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை நீதவானிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்று(13) புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் மேற்கண்டவாறு நீதிவானை நோக்கி சந்தேகநபர்கள் வினவினர்.
இதன்போது தென்பகுதியில் இடம்பெற்றது தனிநபர் பாலியல் வன்புணர்வு எனவும், இங்கு இடம்பெற்றது கூட்டு வன்புணர்வு எனவும் அதனால் தான் மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்கு காலதாமதம் ஆகின்றது என ஊர்காவற்துறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் சந்தேக நபர்களுக்கு பதிலளித்துள்ளார்.
புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டுவன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். வித்தியா கொலை செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகின்ற நிலையில் இன்னமும் மரபணு பரிசோதனைகள் முடிவுறவில்லை.
ஆனால் தென்பகுதியில் இடம்பெற்ற வன்புணர்வு சம்பவம் குறித்து மூன்று நாட்களுக்குள் மரபனு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எமது வழக்கில் தான் இவ்வளவு காலம் இழுத்தடிப்பு நடைபெறுகின்றது” என இவ்வழக்கின் போது நீதவானிடம் கூறியிருந்தனர்.
எனினும் இது பிணையில் விடுதலை செய்யக்கோரும் வாதமாக அமைந்துள்ளது. பிணை விண்ணப்பம் செய்வதானால் யாழ்.மேல் நீதிமன்றில் சட்டத்தரனியூடாக மேற்கொள்ள முடியும். அதை விடுத்து நீதவான் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்ய முடியாது என ஊர்காவற்துறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் எச்சரித்திருந்தார்.
மேலும் விசாரணையின் முடிவில் சந்தேகநபர்களை எதிர்வரும் இருபத்தி ஆறாம்(26) திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் மாணவி வித்தியா கொலைச்சம்பவம் தொடர்பில் முக்கிய சாட்சியம் ஒன்று தனிப்பட்ட முறையில் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. வித்தியா கொலை வழக்கில் குறித்த சாட்சியானவர் கற்பழிப்பு கொலையைக் கண்ணால் கண்ட சாட்சியாக
வாக்குமூலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
இன்றைய நீதிமன்ற நடவடிக்கையின் போது பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், பார்வையாளர் அரங்கில் அதிகம் காணப்பட்டதுடன் சந்தேகநபர்களது உறவினர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர்.
நீதிமன்றத்தின் பாதுகாப்பை வழமைக்கு மாறாக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்