புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2015

தமிழ் நடிகைகளை பாரதிராஜா அறிமுகப்படுத்தாதது ஏன்? இணையத்தில் உலாவரும் கேள்விக் கணைகள்

பாரதிராஜா, ஏன் தனது படங்களில் தமிழ் நடிகைகளை அறிமுகப்படுத்தவில்லை என இணையத்தில் கேள்வி கணைகள் உலா வருகின்றன. 
 
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "நடிகர்கள் சங்கம்
மட்டுமில்லாமல், ஏனைய திரைப்பட சங்கங்களில் பிற மொழியினர் உறுப்பினராக இருப்பதில் தவறில்லை. ஆனால், தலைமைக்கும், நிர்வாக பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. உங்களை வரவேற்கிறோம், உபசரிக்கிறோம். ஒருவருக்கொருவர் சகோதரத்தோடு கலாசார வேறுபாடின்றி இருக்கிறோம். நீங்கள் தொழில் செய்யலாம். சமுதாய கடமையாற்றலாம். எந்தத் துறையாக இருந்தாலும் தலைமை பதவிகளுக்கு மட்டும் தமிழன்தான் வரவேண்டும். மண்ணின் மைந்தன் வரவேண்டும் என்கிற தார்மீகம் உங்களுக்குப் புரியாததல்ல" என்று கூறியிருந்தார். 

பாரதிராஜாவின் இந்த அறிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் பல்வேறு கேள்விகள் உலா வருகிறது. இது தொடர்பாக பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு, காரசாரமான கருத்துமோதல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விவரம்: ஸ்ரீதேவி (தெலுங்கு), ரதி (இந்தி), விஜயசாந்தி (தெலுங்கு), ராதா (மலையாளம்), மாதவி (தெலுங்கு), ரேவதி (மலையாளம்), ரேகா (மலையாளம்), அமலா (பெங்காலி), ரஞ்சிதா (தெலுங்கு), ரியாசென் (பெங்காலி), சிந்து மேனன் (மலையாளம்), காஜல் அகர்வால் (இந்தி), கார்த்திகா (மலையாளம்).

''இப்படி பிற மாநிலங்களைச் சேர்ந்த நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிஜாராவின் மருமகளும் மலையாளிதான் என்பதை மறைத்துவிட்டு வசதியாக அவ்வப்போது தமிழ், தமிழன் என்று பேசுகிறார்'' என்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில், ''பாரதிராஜா ஒரு கலைஞர். தனது படத்துக்குத் தேவையென்றால் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பயன்படுத்துவார். அது கலை. இது அதிகாரம். அதிகாரத்துக்கு வர அடுத்த மாநிலத்தவருக்கு உரிமை கிடையாது'' என்று பாரதிராஜாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன.

ad

ad