புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2015

அனைவருடனும் பகை வளர்த்துக் கொண்டு வினைத்திறனுடன் செயற்படுவது எவ்வாறு?

வடக்கு மாகாண முதலமைச்சர் எல்லோரையும் பகைத்துக் கொண்டு எவ்வாறு வடக்கு மாகாணசபையை வினைத்திறனுடனான சபையாக -மக்களுக்கு
சேவையாற்றக் கூடிய சபையாக, செயற்பட வைக்கப் போகின்றார் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா.
ஆடத் தெரியாதவள் மேடை கோணல்' என்ற கூற்றைப் போல் ஆளுநர் மீதும், பிரதம செயலாளர் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருந்த முதலமைச்சர், அதன் பின்னர் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும், ஆளுநரும், பிரதம செயலாளரும் இடமாற்றப்பட்ட நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது ஆத்திரமடையக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அவரையும் பகைத்துக் கொண்டார். இப்போது ஐக்கிய நாடுகள் சபையை  பகைத்துக் கொண்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையில் ஐ.நா. வின் இணைந்த மதிப்பீடு செயற்திட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் வழங்கிய பதில் தொடர்பில் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
ஐக்கிய நாடுகள் சபை மத்திய அரசிடம் தமிழரை பணியவைக்கப் பார்க்கிறது' என்ற தொனியில் முதலமைச்சர் சபையில் கூறியிருப்பது ஐ.நா. சபையின் செயற்பாடு தொடர்பில் முதலமைச்சரின் விளக்கமற்ற தன்மையையே காட்டுகின்றது.  சர்வதேச நாடுகளோ, சர்வதேச நிறுவனங்களோ மத்திய அரசின் ஊடாகத்தான் வடக்கு மாகாணத்திற்குரிய உதவிகளையோ வேலைத் திட்டங்களையோ செயற்படுத்த முடியும். எமது அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரும் வரை அதுவே நடைமுறையாக இருக்கும்  என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஐ.நா. சபை முதலமைச்சரின் பரிந்துரைகளை வெளிவிவகார அமைச்சின் ஊடாக சமர்ப்பிக்குமாறு கூறியிருப்பதை விளங்கிக் கொள்ளாமல் ஐ.நா. சபைமீது முதலமைச்சர் குற்றம் சாட்டியிருப்பது ஏற்புடையது அல்ல.
இந்த நிலையில் வடமாகாண சபையை வினைத்திறனுள்ள தாகமக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் எவ்வாறு செயற்படவைப்பது,  இன்று வடமாகாணசபை இரண்டு வருடங்களை பூர்த்தி செய்திருக்கும் நிலையில் எந்தவித செயற்பாடுகளும் அற்றதாக காணப்படுவதாக எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல ஆளுங்கட்சிகளை சேர்ந்தவர்களும் பகிரங்கமாக குற்றம் சுமத்து கின்றபோது வடக்கு மாகாண சபையை வினைத்திறனுள்ள சபையாக மாற்றுவது எப்படி?
கல்வி, போக்குவரத்து, மின்சாரம், வீதி, வேலையற்ற பட்டதாரிகள், வாழ்வாதார பிரச்சினைகள், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளையும், போரினால் ஊனமுற்றவர்கள், விதவைகள், அநாதைகள், இவ்வாறு நிர்க்கதியுற்றிருக்கும் எம் உறவுகளுக் கான தீர்வையும் வடமாகாண சபை எவ்வாறு செயற்படுத்தப் போகின்றது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ad

ad