புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2016

2016 இன் முதன்மை சுற்றுலா தளங்களில் இலங்கையும் உள்ளடக்கம்


2016ஆம் ஆண்டின் ராடார் சுற்றுலா மைய நாடுகளின் தரப்படுத்தலில் பத்து முதன்மை நாடுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை இந்து சமுத்திர பிராந்தியத்தில் நீர்வீழ்ச்சிகள், கரையோரங்கள் மற்றும் யுனெஸ்கோவின் எட்டு உலக அதிசயங்களையும் கொண்டு அமைந்துள்ளது .
இதில் பௌத்தர்களின் புனித தந்தம் உள்ள தலதா மாளிகையும் தேயிலை பெருந்தோட்டங்களும் அடங்குவதாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தரப்படுத்தலின் முதல் 10 நாடுகளில் கொலம்பியா, ஜப்பான், சுவிட்ஸர்லாந்து, கிரீன்லாந்து, ஒஹியோ, சீனா, ஜோர்ஜியா, மொன்டிக்ரோ மற்றும் நிக்கரகுவா ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad