புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது (ஜனவரி 7, 1841)

ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் அமெரிக்க
மிஷன் மூலம் வெளியிடப்பட்டது. இப்பத்திரிகை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒருமுறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது.

இந்த பத்திரிகையில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச் செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும், புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதன் முதல் ஆசிரியர்களாக ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். இதில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கங்கள் பலவும் ஹென்றி மார்ட்டினாலேயே எழுதப்பட்டதாக தெரிகிறது. பஞ்சதந்திர கதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இப்பத்திரிகையில் வெளியிட்டார். 

இதற்கு முன்னர் இலங்கையில் தொடங்கப்பட்ட பத்திரிகைகள் அனைத்துக்கும் ஆங்கிலேயரே ஆசிரியர்களாக இருந்து வந்தனர். இதனால் இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது. கரோல் விசுவநாத பிள்ளை, ஆணல்ட் சதாசிவம் பிள்ளை ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராக பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad