அதேவேளை 12 ஆவது தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத் தும் வாய்ப்பு பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாம் திகதி நடைபெற்ற சாவ் நிர்வாகக் குழு கூட்டத்திலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. சாவ் தலைவரான காசி சலாவூதீன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததினால், பிரதி தலைவராக செயற்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஊடக மற்றும் தொடர்பாடல் அதிகாரியுமான ரஞ்சித் ரொட்ரிகோ கூட்டத்தை வழிநடத்தினார்.
இதில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. அதன்படி மகளிருக்கான தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. அத்தோடு 2017ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து போட்டிகளை பங்களாதேஷ் நடத்துகிறது. அதேவேளை நடைபெற்றுமுடிந்த தெற்காசியகால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பிரதம விருந்தினராகவும் ரஞ்சித் ரொட்ரிகோ கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.