புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

ஆபாச பாடல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் சிம்பு மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

ஆபாச பாடல் தொடர்பாக தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு தாக்கல் செய்த மனு மீதான
விசாரணையை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

ஆபாச பாடல்

நடிகர் சிம்பு பாடியதாக ‘பீப்’ ஆபாச பாடல் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாடல் வரிகளில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான பல வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து நடிகர் சிம்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. சிம்பு, அனிருத் மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கின் விசாரணைக்காக டிசம்பர் 19-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிம்பு, அனிருத் ஆகியோருக்கு ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

ரத்து செய்யவேண்டும்

இதையடுத்து ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்தார். அதில், கோவை போலீசார் பதிவு செய்த வழக்கையும், அந்த வழக்கு விசாரணைக்காக தன்னை நேரில் ஆஜராகவேண்டும் என்று அனுப்பிய சம்மனையும் ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் தியாகேஸ்வரன், ‘ஒரு சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது. ஆனால் தமிழகம் முழுவதும் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்கூட முன்ஜாமீன் மனு மீதான உத்தரவில், கோவை வழக்கிற்கு சென்னையிலேயே ஆஜராகலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

தள்ளிவைப்பு 

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எமிலியாஸ், ‘பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு நேரில் ஆஜராகும்படி மனுதாரருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் இதுவரை ஆஜராகவில்லை. காலஅவகாசத்தை கேட்டுக்கொண்டே வருகிறார். அவர் முதலில் ஆஜராக உத்தரவிடவேண்டும்’ என்று வாதிட்டார். 

அப்போது நீதிபதி, ‘மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதானே’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இருதரப்பு வக்கீலும் ‘ஆமாம்’ என்று கூறினார்கள்.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 21-ந் தேதி தள்ளிவைக்கிறேன். அதற்குள் கோவை மாவட்ட போலீசார், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். 

ad

ad