புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

யாழில் விபச்சாரிகள் துரத்தி பிடிப்பு !

தென்னிலங்கையில் இருந்து வருபவர்களுக்கான யாழ் – பாசையூர் பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

அப்பகுதி இளைஞர்களும், யாழ்ப்பாணம் பொலிஸாரும் இணைந்து சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாட்டில் ஈடுபட்ட இவ் விபச்சார விடுதியினை முற்றுகையிட்டுள்ளனர். இவ் முற்றுகையின் போது 20 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், விடுதியின் நிர்வாகத்தினர் 3 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சென் பற்றிஸ் கல்லூரிக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் உள்ள குறித்த விடுதியில் கொழும்பில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பலர் தங்குவது வழமையாக இருந்துள்ளது. இருந்த போதும் அவ்விடுதியில் விபச்சாரம் நடத்தப்பட்டும் வந்துள்ளது.
இவ்வாறு விபச்சாரம் நடத்தப்படுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் இன்று அவ்விடுதியினை சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்ததும், விபச்சார நிலையத்திற்குள் புகுந்த போது அங்கிருந்த 2 இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இருந்த போதும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டள்ளார்.
இது தொர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விடுதியினை நிர்வகித்த 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் 4 இளைஞர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டவர்களும், விசாரணைக்கு என அழைக்கப்பட்டவர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விசாரணைகளின் முடிவில் இவர்கள் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.jaffna 01jaffna 02jaffna 04jaffna


ad

ad