அதிகரித்த வெப்பம் காரணமாக வலய, மாவட்ட, மாகாண விளையாட்டுப் போட்டிகளை அடுத்த இரு வாரத்துக்கு இடை நிறுத்துமாறு
இசுருபாய கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளை இடைநிறுத்துவது தொடர்பான கடிதம் ஒன்று நேற்று அனைத்து மாகாண கல்வித் திணைக்களங்களுக்கும் கல்வி அமைச்சால் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமாருடன் தொடர்பு கொண்டு கேட்ட வேளையில், வடமாகாண வெப்ப நிலையையும், அது போட்டிகளை நடத்த உகந்ததா என்பதையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.