புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

அ.தி.மு.க.வின் பினாமி அணி ம.ந.கூ.; இது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு: திருமாவளவன்

அ.தி.மு.க.வின் பினாமி அணி மக்கள் நலக் கூட்டணி என்று கூறுவது, வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்று திருமாவளவன் கூறினார்.
சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள்
கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகின்ற மார்ச் 31-ம் தேதிக்குள் மக்கள் நலக் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இறுதி வரையறை செய்யப்படும்.

தே.மு.தி.க.வுக்கான தொகுதிகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள். எங்கள் அணிக்கு, மக்கள் நலக் கூட்டணி-தே.மு.தி.க. என்றே பெயர். இப்படி கூறுவதில் விஜயகாந்துக்கு கெளரவ பிரச்னை இல்லை.

ஊழல், மது ஒழிப்பு, கூட்டணி ஆட்சி என்ற அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க. இணைந்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியுடன் மேலும் சில கட்சிகள் பேசி வருகின்றன. த.மா.கா.வுக்கு மக்கள் நலக் கூட்டணி விடுத்த அழைப்பு அப்படியே உள்ளது. மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையை வைகோ விரைவில் வெளியிடுவார். 

ரூ.1,500 கோடி பேரம் பேசியதாக கூறுவது வைகோவுக்கு எதிரானது மட்டுமல்ல, மக்கள் நலக் கூட்டணி மீதான விமர்சனம். அ.தி.மு.க.வின் பினாமி அணி மக்கள் நலக் கூட்டணி என்று கூறுவது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு. 50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு பிறகு ஒரு கூட்டணி ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

ad

ad