புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

ஸ்ரீ வரசித்தி விநாயகர் நடன கல்லூரி ஸ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் இறை அருளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.

..
Kaladdi Pillayar Pungudutivu added 10 new photos to the album: புங்குடுதீவு" ஸ்ரீ வரசித்தி விநாயகர் கலைக் கல்லூரி" ஆரம்ப விழா — with Mahalingam Gnaneswaran.
ன் நல்முயற்சியினாலும் சிவா ஸ்ரீ பஞ்சட்சார விஜயகுமார குருக்கள் அவர்களின் நல் ஆலோசனையுடனும் நல் ஆசியுடனும்,பரத கலா வித்தகர் சுகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் நடன வகுப்பில் இணைந்து ஸ்ரீ வரசித்தி விநாயகர் நடன கல்லூரி ஸ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் இறை அருளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.இந்நிகழ்வில் புங்குடுதீவு ஸ்ரீ கணேஷ மகா வித்யாலய அதிபர் அவர்களும்,வர்த்தக பிரமுகர் ஜெயபால் அவர்கள்,ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்த தயாளினி கணேசலிங்கம் அவர்கள்,சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த புனியமூர்த்தி சரவணமுத்து அவர்களுடன் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்து இந்நிகழ்விற்கு தங்களின் நல் ஆதரவுகளையும் வழங்கினர்.அத்துடன் இக்கலுரியில் நடனம்,பண்ணிசை,கோலம் போடுதல்,கவிதை எழுதல் கற்பிக்கப்பட இருக்கிறது.விரைவில் ஆங்கிலம் மற்றும் கணினி .[கம்ப்யூட்டர்] வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன .மேற்படி நடன ஆசிரியர் சுகுமார் அவர்கள் ஸ்ரீ கணேஷ மகா விதயாலயத்திலும் 28 03 2016 முதல் நடன வகுப்புக்களை ஆரம்பித்து நடாத்த உள்ளார்

ad

ad