புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

நல்லிணக்க அடிப்படையில் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்குக்கு விஜயம்!

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன உட்பட தெற்கின் 90இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நல்லிணக்க அடிப்படையில் இன்று காலை கொழும்பிலிருந்து யாழ்.தேவி ரயிலில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தனர். 

இந்தக் குழுவினர் வடக்கின் 50இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். 

மதத்தலைவர்களைச் சந்தித்தல், முதலமைச்சரைச் சந்தித்தல், ஆளுநரைச் சந்தித்தல், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக நினைவுத்தூபி அமைத்தல், காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு, பலாலியில் படை அதிகாரிகளுடனான சந்திப்பு, ஊடகச் செயலமர்வு, சான்றிதழ் வழங்குதல், கலாசார நிகழ்வுகள், கடன் அடிப்படையிலான மோட்டார் வாகனம் வழங்கல், பாதிக்கப்பட்ட ஊடக குடும்பங்கள் மூன்றிற்கு வீடு அமைக்கும் அடிக்கல் நாட்டல் வைபவம், நாகவிகாரை, நயினை நாகபூசனி அம்மன் ஆலய வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது வடக்கு ஊடகவியலாளர்களும் தெற்கின் ஊடகவியலாளர்களும் சங்கமிக்கும் நல்லிணக்கச் சந்திப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ad

ad