புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

நஸ்ட ஈடு வேண்டாம் சரணடைந்து உயிரோடிருக்கும்என் பிள்ளையை மீட்டுத்தரும்படிகதறும் தாய்


ஏழு வருடங்களாக மக்களிடம் பல விடயங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்டு விசாரணைகள் நடக்கின்றன. ஆனால் மக்களின் கேள்விகளுக்கு இதுவரையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு இன்று மூன்றாவது நாளாக முல்லைத்தீவில் சாட்சியங்களைப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

முல்லைத்தீவு முள்ளியவளையில் இருந்து கேப்பாப்புலவு நோக்கி 2009ஆம் ஆண்டு ஜனவரியில் இராணுவத்தினர் பாரிய படையெடுப்பை மேற்கொண்டனர்
குறித்த தாக்குதலை விடுதலைப் புலிகளின் ராதா படையணியின் 1 பிளட்டுஅணி(22) எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்தனர்.
இராணுவத்தினரின் பற்றாலியன் அணி(93) தாக்குதலை தொடுத்திருந்தனர். சமவலிமையற்ற தாக்குதலை எதிர்கொண்ட ராதா படையணியின் ஏழு பேர் வீரமரணத்தை தழுவிய நிலையில் சற்று பின்வாங்கினர்.
எனினும் 1 செக்சனை(7பேரை), இராணுவத்தினர் சுற்றி வளைத்த நிலையில் அவர்கள் சரணடைந்தார்கள். சம்பவத்தை மற்ற செக்சன் வீரர்கள் அடுத்த நிலையில் உருமறைப்பில் மறைந்திருந்து அவதானித்துள்ளனர்.
எனினும் சமனற்ற எதிர்த் தாக்குதலை எதிர் கொள்ளமுடியாமல் அவர்களும் பின்வாங்கினார்கள். அந்தக் காலகட்டத்தில் சரணடைந்தவர்கள் விபரம் எதுவும் அரச தரப்பில் இருந்து வெளிவராத காரணத்தினால் அவர்கள் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.
மேற்குறித்த தாக்குதலில் கலந்து உருமறைப்பில் இருந்து மீளத்திரும்பிய போராளி ஒருவர் சம்பவம் தொடர்பாக இந்த தாயிடம் விபரமாக எடுத்துச் சொல்லிவிட்டு “உங்கள் மகன் இறக்கவில்லை இருக்கின்றார்” என்று கூறிவிட்டு, அவர் மற்றுமொரு முள்ளிவாய்க்கால் சமரில் வீரமரணமடைந்து விட்டார்.
தற்போழுது அந்தத் தாய் காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மெக்ஸ்வெல் பரணகம முன்னிலையில் தமக்கு எவ்வித நஸ்ட ஈடும் வேண்டாம் பிள்ளையை மீட்டுத்தரும்படி வேண்டி நிற்கின்றார்.
அத்தோடு அவர் மன உளைச்சலுடன் விரக்தியுடன் வாழ்வதாகவும், மருந்தில் தான் தனது உயிர் ஊசலாடுவதாகவும் கண்ணீர் மல்க  கூறினார்.


ad

ad