புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

திக்கம் பாலர்பாடசாலை விளையாட்டுவிழா – வடமாகாணசபையின் அமைச்சர், உறுப்பினர் பங்கேற்பு

பருத்தித்துறை, திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்படுகின்ற திக்கம் பாலர் பாடசாலையின் செயற்பட்டுமகிழ்வோம் விளையாட்டுவிழா திக்கம் மத்திய சனசமூக நிலைய செயலாளர் சுதேஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசாவும், சிறப்பு விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்துகொண்டதுடன்,  மன்னார் முன்னைநாள் அரசாங்க அதிபர்  விசுவலிங்கம் நல்லூர் பிரதேசசெயலக கிராம அலுவலர் ப.தர்சானந் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களின் மெய்வல்லுனர் நிகழ்ச்சிகள், இடைவேளை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. விழாவில் பெற்றோர்கள், ஊரவர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

ad

ad