புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2016

12 நாள் கடும் சண்டைக்கு பின்னர் சிரியாவில் முக்கிய நகரம் மீட்பு

T

சிரியாவில் 5 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அங்கு அமலுக்கு வந்துள்ள போதிலும், அதை மீறி அதிபர் ஆதரவு படைகளும், கிளர்ச்சியாளர்களின் படைகளும் மோதி வருகின்றன.
இந்த நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகளுக்கு பொருட்களை சப்ளை செய்கிற
தடத்தில், டமாஸ்கஸ் நகருக்கு கிழக்கில் அமைந்துள்ள மேடா என்ற நகரத்தை மீட்பதற்காக சண்டை நடந்து வந்தது.
கடந்த 12 நாட்களாக கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும், அதிபர் ஆதரவு படைகளுக்கும் இடையே நடந்து வந்த இந்த சண்டை, சிரிய படைகளுக்கு ஆதரவாக அமைந்தது. அந்த நகரை சிரிய படைகள் மீட்டு விட்டன.
மேடா நகரத்தை பொறுத்தமட்டில், அது முழுக்க முழுக்க ஜெய்ஷ் இ இஸ்லாம் என்ற கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த நகரை சிரியா படைகள் மீட்டிருப்பது முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.

ad

ad